லெபனான் விபத்து: 157 பேர் உயிரிழப்பு.! உதவ முன் வந்த இந்தியா.!

Default Image

தலைநகர் பெய்ரூட்டில்  ஏற்பட்ட வெடிப்புகள் குறித்து பொருளாதார ரீதியாக லெபனானுக்கு உதவி வழங்குவதாக இந்தியா அறிவித்தது.

லெபனானில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 5,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட்டில்  வெடிப்புகள் ஏற்பட்டது குறித்து  பொருளாதார ரீதியாக சிதைந்த லெபனானுக்கு உதவி வழங்குவதாக இந்தியா கடந்த வியாழக்கிழமை அறிவித்தது.

இந்த வெடிப்பு பலரால் கேமராவில் எடுக்கப்பட்டது அந்த வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. அந்த வீடியோவில்  குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து மைல்கள், பால்கனிகள் கீழே விழுந்தன, கூரைகள் இடிந்து விழுந்தன, ஜன்னல்கள் சிதைந்தன.

இது குறித்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் ஒரு கிடங்கில் ஆறு ஆண்டுகளாக உள்ளது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பிரதமர் ஹசன் டயப் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்