இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேசம் செல்கிறார்: குடியரசுத்தலைவர்..!
இரண்டு நாள் பயணமாக உத்திரப்பிரதேச பயணம் மேற்கொள்கிறார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்.
குடியரசு மாளிகை அறிவித்துள்ள அறிவிப்பின்படி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கான்பூருக்கு பயணம் செய்யவுள்ளார். இவர் நவம்பர் 24 ஆம் தேதி அன்று சௌத்ரி ஹர்மோகன் சிங் யாதவின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள உள்ளார்.
அவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார். மேலும், நவம்பர் 25 ஆம் தேதி அன்று ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அங்கும் உரையாற்ற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.