உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
பாகிஸ்தானியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசாக்கள் வரும் 27, மருத்துவ விசாக்கள் 29-ம் தேதி முதல் செல்லாது என இந்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம் நடவுபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான விசாக்களையும் மத்திய அரசு உடனடியாக நிறுத்தி வைத்துள்ளது.
இதன்படி, இனி எந்த பாகிஸ்தானிய குடிமகனும் இந்தியாவுக்குள் நுழைய முடியாது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களுக்கான விசா வரும் 27ம் தேதி முதல் செல்லாது. மேலும், மருத்துவ காரணங்களுக்காக பெறப்பட்ட விசா வரும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லும்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்ப அறிவுறுத்திய மத்திய அரசு, இந்தியர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் நீர்ப்பாசன தேவையில் 93% தண்ணீர் இந்த சிந்து நதி மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுக்கையில்தான் 61% பாகிஸ்தானியர்கள் வாழ்கின்றனர். பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக நீர் நிறுத்தப்பட்டதால், பாகிஸ்தானியர்கள் பல இன்னல்களை சந்திக்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.