மும்பை மாநகராட்சியை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசு மற்றும் டெல்லி அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக, தினந்தோறும் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. நோயாளிகள் அதிகரிப்பால், ஆக்சிஜன் போன்ற மருந்து பொருட்கள் பெற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து கொண்டிருக்கின்றன. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்ந்து நீடிப்பதால் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லியில் நாள் ஒன்றுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே அனுப்பியதால், ஏன்? நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறி, மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
இந்த உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, மும்பை மாநகராட்சியிடம் இருந்து தினமும் நல்ல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் ஆக்சிஜன் சப்ளை உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணிகளில் மும்பை மாநகராட்சி மிகச்சிறப்பாக பணி செய்து வருகிறது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் எப்படி செய்கிறார்கள்? என்றும் அவர்கள் யாருக்கும் இடையூறு செய்யமால் எப்படி ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்கிறார்கள்? மாகாராஷ்டிரா ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நிலையில் டெல்லி ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியவில்லை என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறைய திறம்பட சமாளிக்கும் மும்பை மாநகராட்சியிடம் இருந்து டெல்லி அரசும், மத்திய அரசும் கற்றுக்கொள்ள வேண்டும். மும்பை மாநகராட்சி சில குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்துள்ளது. டெல்லியை அவமதிக்கவில்லை என்றும் ஆனால், அவர்கள் செய்ததை நாம் பார்க்க வேண்டும் எனவும் நீதிபதி சந்திரசூட் கூறி, டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்கிட வேண்டும். அதற்கான திட்டத்தை மத்திய அரசு நாளை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…