I.N.D.I.A : இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் இன்று முக்கிய ஆலோசனை.!

India Alliance parties

வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி  உள்ளிட்ட 28  எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கூட்டணி தான் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி. இந்த கூட்டணியின் முதல் ஆலோசனை கூட்டமானது பீகார் மாநிலம் பாட்னா, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

ஏற்கனவே நடந்து முடிந்த கூட்டங்களில், கூட்டணியின் பெயர் இந்தியா (I.N.D.I.A) , கூட்டணி ஒருங்கிணைப்பாளர் குழு ஆகியவை அமைக்கப்பட்டது. மேலும், முதலில் 26 கட்சிகள் என இருந்தது. தற்போது 28 கட்சிகளாக கூடுதல் பலம் பெற்றுள்ளது.

 இந்த ஆலோசனை கூட்டத்தை அடுத்து , இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 18ஆம் தேதியில் நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவருவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், இந்தியா கூட்டணியில் கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்