டெல்லி காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர்
டெல்லி : மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாள் (அக்.2,) இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேயர் அடக்குமுறையில் இருந்த இந்தியர்களை அகிம்சை மூலம் போராட வைத்து சுதந்திரம் பெற்று தந்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (மகாத்மா காந்தி).
அன்பு, அகிம்சை, அமைதி, எளிமையின் அடையாளமான காந்தியின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலர் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம், வாழ்த்து செய்தியை பகிர்ந்து வருகினற்னர்.
இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அவரை தவிர, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், டெல்லி முதலமைச்சர் அதிஷி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா டெல்லி கவர்னர் (எல்ஜி) வி.கே.சக்சேனா, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பலர் மரியாதை செலுத்தினர்.