பிரதமர் மோடியின் தாயார் மறைவு – முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்…!

Published by
லீனா

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாவின் நூறு ஆண்டுகால போராட்ட வாழ்க்கை இந்திய இலட்சியங்களின் அடையாளம். ஸ்ரீ மோடி தனது வாழ்க்கையில்  புனித ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அன்புள்ள பிரதமர் மோடி உங்கள் அன்புக்குரிய தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்.

ஆளுநர் ஆர்.என்.ரவி 

பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தாயார் மறைவு மிகவும் வருந்ததக்க நிகழ்வு. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

ராகுல்காந்தி 

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் திருமதி ஹிரா பா அவர்களின் மறைவுச் செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த கடினமான நேரத்தில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமலஹாசன் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி  அவர்களின் தாயார் ஹீராபென் மோடி மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 200 வயதானாலும் தாய் தாய்தான். இழப்பு இழப்புதான்.

வைகோ 

பிரதமர் நரேந்திர மோடி தாயார் ஹீராபென் நூறாண்டுகள் வாழ்ந்து, மறைந்திருக்கிறார். இந்த துக்க செய்தியை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். இந்த துயரத்தைத் தாங்கிகொள்ளும் மனவலிமையையும், உறுதியையும் இயற்கை உங்களுக்கு வழங்கட்டும்.
அண்ணாமலை

மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு

பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமி
நமது மாண்புமிகு பிரதமரின் தாயார் திருமதி ஹீராபென் மோடி இன்று அதிகாலை காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்
உங்கள் அன்புத் தாயார் ஹீராபென் மறைவு அறிந்து வருந்தினேன். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆறுதல் வார்த்தைகள் போதுமானதாக இருக்காது என்றாலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உங்கள் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

2 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

2 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

4 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

4 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

7 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

7 hours ago