சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடையா?
சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி பார் கவுன்சிலில் முறையீடு செய்யப்பட்டுள்ளது .
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்கள் அரசு ஊழியர்களாக இருப்பதால் அவர்கள் வழக்கறிஞர் தொழிலைச் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என இந்திய பார் கவுன்சிலில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் முறையிட்டார்.
இதை வல்லுநர் குழு பரிசீலித்ததை அடுத்துச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள வழக்கறிஞர்களுக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பிக் கருத்துக் கேட்க இந்திய பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர்களாகவும் தொழில் செய்து வருகின்றனர். ப.சிதம்பரம், கபில் சிபல் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதுடன் வழக்கறிஞர் தொழிலையும் செய்து வருகின்றனர்.
source: dinasuvadu.com