சட்டங்கள் என்பது மேகி உணவு அல்ல – மாணிக்கம் தாகூர்

Published by
லீனா

வேளாண் சட்டங்களை விவாதங்களின்றி திரும்ப பெற்றது சர்வாதிகார போக்கை காட்டுவதாக மாணிக்கம் தாகூர் குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், இந்த குளிர்காலக் கூட்டத்தொடரானது டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி,நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் 26 மசோதாக்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றத் திட்டமிட்டிருந்தது.

இதனையடுத்து, மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை  மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில், தற்போது மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் 3 வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் இரு அவைகளிலும் வேளாண் சட்டம் ரத்து மசோதா நிறைவேற்றபட்டது.

இந்நிலையில், விவாதங்களின்றி வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்  தெரிவித்திருந்தனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்களும் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், வேளாண் சட்டங்களை விவாதங்களின்றி திரும்ப பெற்றது சர்வாதிகார போக்கை காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், செய்த தவறை மூடி மறைப்பது போல, விவாதம் நடத்தினால் அவர்களது தவறு வெளிவந்துவிடும் என்பதற்காக விவாதம்  நடத்தப்படவில்லை. சட்டங்கள் என்பது மேகி உணவு போன்றது அல்ல. நாடாளுமன்றம் என்பது அனைவரின் கருத்துக்களையும் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?

டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…

11 minutes ago

பாஜக தலைவர் பொறுப்பேற்பு…, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியா? – நயினார் நாகேந்திரன் பதில்.!

சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…

19 minutes ago

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

2 hours ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

2 hours ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

2 hours ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

3 hours ago