தேச துரோக சட்டத்தை தொடர இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை!

மாற்றங்களுடன் தேச துரோக சட்டத்தை தொடர 22-வது இந்திய சட்ட ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பரிந்துரை.
தேச துரோக சட்டப்பிரிவு 124 ஏ-வை தொடர 22-வது இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்திய சட்ட ஆணையம், இந்திய தண்டனைச் சட்டம், 1860-இல் உள்ள தேசத் துரோகம் தொடர்பான விதிகளைத் தக்கவைக்க பரிந்துரைத்துள்ளது. 124-ஏ சட்டப்பிரிவின் கீழ் தற்போது 3 ஆண்டுகள் சிறை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஆயும் தண்டனை விதிக்கும் வகையில் மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது.
எத்தகைய செயல்களின் கீழ் தேச துரோக சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் 124-ஏ சட்டப்பிரிவு, தற்போதைய நாடைமுறைக்கு பொருந்தாது என கூறி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தேச துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய விரும்புவதாக மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் பதிலை அடுத்து தேச துரோக சட்டத்தை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனவே, உச்சநீதிமன்றம் சட்டத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில், மாற்றங்களுடன் தேச துரோக சட்டத்தை (Section 124A) தொடர 22வது இந்திய சட்ட ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பரிந்துரை செய்துள்ளது. தேசவிரோத மற்றும் பிரிவினைவாத சக்திகளை எதிர்த்துப் போராடுவதில் அதன் பயன்பாட்டைக் கொண்டுள்ளது தேச துரோக சட்டம் என்றுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை வன்முறை மற்றும் சட்டவிரோத வழிகளில் கவிழ்க்கும் முயற்சிகளில் இருந்து பாதுகாக்க முயல்கிறது. மாநிலத்தின் பாதுகாப்பு இன்றியமையாத நிபந்தனையாகும். இந்தச் சூழலில், பிரிவு l24A ஐத் தக்க வைத்துக் கொள்வது அவசியமாகும். தேசிய பாதுகாப்பைக் கையாளும் சிறப்புச் சட்டங்கள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், மாநிலத்தை இலக்காக கொண்ட குற்றங்களைத் தண்டிப்பது தொடர்பான விதிகளைக் கொண்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டனர்.