சட்டக்கல்லூரி மாணவி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை!
சென்னை: சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புலம்பெயர்ந்த தொழிலாளியின் மரண தண்டனையை கேரள உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள பெரும்பாவூரைச் சேர்ந்த, சட்டக்கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரே குற்றவாளியான அமீர்ல் இஸ்லாமுக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை கேரள உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் இன்று (மே 20) உறுதி செய்தது.
கடந்த 2016 ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி அன்று பெரும்பாவூர் அருகே குருப்பம்பாடியில் உள்ள அவரது வீட்டில் 30 வயது சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் கேரளாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது, மேலும் இந்த சம்பவம் நடந்து 49 மாதங்களுக்குப் பிறகு, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி அசாமில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளியான அமீர்ல் இஸ்லாம் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு 1,500 பக்க குற்றப்பத்திரிகையை 2016 அன்று சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையில், அமீருல் இஸ்லாமுக்கு 2017-ல் கீழமை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை இன்றைய தினம் (20ம் தேதி) திங்கட்கிழமை, நீதிபதி பி.பி.சுரேஷ் குமார், நீதிபதி எஸ்.மன்னு ஆகியோர் அமர்வு மரண தண்டனையை உறுதி செய்தது.