பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து கொண்டே வருகிறது – ஆம் ஆத்மியை குறிவைக்கும் காங்கிரஸ்…!
பஞ்சாப் மாநிலத்தில் முன்னதாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் அவர்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காலிஸ்தான் நிறுவன நாளை ஒட்டி கடந்த மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் சீக்கிய கொடியேற்றப்பட்டு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிவசேனா அமைப்பினர் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனை அடுத்து சிவசேனா அமைப்பினர் மற்றும் காலிஸ்தான் அமைப்பினர் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு பெரும் கைகலப்பு உருவாகியிருந்தது.
தற்பொழுதும் இது தொடர்பாக பேசி உள்ள காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா அவர்கள், பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு சிதைந்து வருவதாக தெரிவித்துள்ளார் மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் வன்முறை வேண்டாம் என்று தனது தொண்டர்களிடம் சொல்வதிலிருந்து ஏன் விலகி நிற்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் தனக்கு எதிராக இருப்பவர்களுக்கு எதிராக காவல்துறையை ஏவி விடுகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.