5,000 தன்னார்வலர்கள் மீது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை – சீரம் நிறுவனம்

Default Image

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் 5,000 இந்திய தன்னார்வலர்களுக்கு மீது சோதனை.

கொரோனா தடுப்பூசி இந்தியா:

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் 5,000 இந்திய தன்னார்வலர்களுக்கு மீது சோதனையை தொடங்குவதாகவும்,  சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புனேவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறுகையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான இந்நிறுவனம் சந்தையில் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலுக்கு முன்னர் கிட்டத்தட்ட 300 மில்லியன் டோஸ் தயாரிக்கப்படும்.

நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா காணொளி மூலமாக தடுப்பூசியின் பெருமளவிலான உற்பத்தி அடுத்த ஆண்டு தொடங்கும் என்று கூறியுள்ளார். தடுப்பூசியின் விலை ரூ .1,000 க்கு கீழே விற்க்கப்படும் என்றார. ஆனால் அனைத்து நோய்த்தடுப்பு திட்டங்கள் மூலம் அரசாங்கம் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கடந்த திங்களன்று தடுப்பூசியுடன் வெற்றியை அறிவித்தது. இது உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் டஜன் கணக்கான தடுப்பூசி வேட்பாளர்களில் முன்னணி வகிக்கிறது. இந்தியா மற்றும் 3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசி தயாரிக்கவும் வழங்கவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) உடன் இந்த வர்சிட்டி ஒப்பந்தம் செய்துள்ளது என்று பூனவல்லா கூறினார்.

இந்த விண்ணப்பத்தை அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகத்திற்கு அனுப்புகிறோம் என்று சி.என்.பி.சி-டிவி -18 செய்தி சேனலுடன் கூரிய பூனவல்லா நாங்கள் எந்த வகையான ஆய்வு சோதனை செய்ய வேண்டும் என்பதற்கு அவர்கள் 1-2 வாரங்கள் எடுக்கும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்