கேரளாவில் இன்று முதல் ” பெவ் கியூ” செயலி மூலம் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்.!

Default Image

பொது முடக்கத்தால் கேரளாவில் 67 நாட்களுக்கு பின் மதுபான விற்பனை நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால், கேரளாவில் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பே மதுக்கடைகள் மூடப்பட்டது. அதன்பிறகு, கேரளா அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்ட்டது. அதில், மருத்துவர்களின் சான்றிதழ் பெற்று வருபவர்களுக்கு  மட்டும் மது கொடுக்கப்படும் என்று தெரிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, மத்திய அரசு மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. ஆனால், கேரள அரசு மதுக்கடைகளை திறக்காமல் கள்ளுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. பின்னர் கடந்த வாரம் முதல் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வரும் கூட்டத்தை தவிர்க்க செல்போன் செயலியின் மூலம் மது விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதற்காக கேரளா அரசு ” பெவ் கியூ” என்ற செயலியை உருவாக்கி உள்ளது. இந்த செயலி மூலம் டோக்கன் பெற்று குறிப்பிட்ட கடையில் சென்று மது வாங்கி கொள்ளலாம். காலை 9 முதல் மாலை 5 மணி வரை மது விற்பனை நடக்கும். ஆனால், பார்களில் பார்சல் மட்டுமே அனுமதி, அமர்ந்து மது அருந்த அனுமதியில்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில், கேரளாவில் இன்று முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்றும் ஒரு முறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார். BEVQ என்ற செயலியில் பதிவு செய்து இ-டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்