ஆக்ஸிசன் சிலிண்டருடன் தனது ஐஏஎஸ் கனவை.! நிறைவேற்ற யூபிஎஸ்சி தேர்வு எழுதிய பெண்.!
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆக்ஸிசன் சிலிண்டருடன் யுபிஎஸ்சி தேர்வு எழுத வந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டதுடன் அவரின் தன்னபிக்கையை பாராட்டினர். இந்நிலையில் திருவந்தபுரத்தில் நடந்த யுபிஎஸ்சி தேர்வு எழுத தனது தந்தையுடன் தன்னபிக்கை மிளிர தேர்வெழுத வந்த ஒரு பெண்ணின் விடாமுயற்சி தற்போது அனைவராலும் பாரட்டுக்கு உள்ளாகியுள்ளது .
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் லதிஷா (25 ) வயது ஆனவர் பிறப்பு முதல் இருந்தே எலும்பு நோய்க்கு அவதிப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவருடைய நுரையீரலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளது அதனால் ஆக்ஸிசன் சிலிண்டர் இல்லாமல் லதிஷாவால் வெளியே செல்ல முடியாது.
தன்னபிக்கை தாரகையை பெற்றோர் மிக கவனமாக வளர்த்து வந்துள்ளனர். ஐஏஎஸ் ஆகுவது இவருடைய கனவாகும் அதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்.மேலும் வணிகவியல் பிரிவில் எம்.காம் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
நேற்று நாடு முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.திருவனந்தபுரத்தில் பள்ளி ஒன்றில் ஆக்ஸிசன் சிலிண்டர் உதவியுடன் சக்கர நாற்காலயின் அமர்ந்து லதிஷா தேர்வு எழுதினார்.இதற்கான ஏற்பாடுகளை செய்த கோட்டம் ஆட்சியருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தன் உடல் நலத்தை எதிர்பார்க்காமல் கனவை எதிர்நோக்கிய லதிஷாவின் தைரியம் ,தன்னபிக்கை,விடாமுயற்சி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.