ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளதில், கடந்த 11மாதங்களில் ஒரு லட்சத்து 48ஆயிரம் ரயில்கள் சேருமிடத்தைத் தாமதமாகச் சென்றடைந்தாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட தகவலில் 2017ஏப்ரல் முதல் 2018பிப்ரவரி முடிய 11 மாதங்களில் ஒரு லட்சத்து 48ஆயிரம் ரயில்கள் சென்றடைய வேண்டிய இடங்களைத் தாமதமாகச் சென்றடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
சராசரியாக ஒவ்வொரு நாளும் 450 ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 75ஆயிரத்து 880 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. 60ஆயிரத்து 856 அதிவிரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன.
ராஜதானி, சதாப்தி, துரந்தோ வகைகளில் ஏழாயிரம் ரயில்கள் தாமதமாகச் சென்றுள்ளன. வட இந்தியாவில் பனி மூட்டத்தால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மட்டும் 25விழுக்காடு ரயில்கள் தாமதமாக இயங்கியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் 66ஆயிரம் கிலோமீட்டர் ரயில் பாதைகளில் நாள்தோறும் 12ஆயிரத்து அறுநூறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.