பிரதமர் மோடிக்கு ‘லதா தீனநாத் மங்கேஷ்கர்’ விருது..!

மும்பையில் இன்று நடைபெற்ற விழாவில், லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த பிரபல திரைப்படப்பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலான விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என்றும், ஏப்-24ல் நடைபெறும் விழாவில் நாட்டிற்காக தன்னலமற்ற சேவையாற்றியதற்க்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது என்றும், லதா மங்கேஸ்கர் பெயரிலான விருது முதன்முறையாக பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மும்பையில் இன்று நடைபெற்ற விழாவில், லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற்ற பின் பேசிய, தனக்கு கிடைத்த இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாகவும், இசையின் சக்தியை, லதா மங்கேஷ்கரின் வடிவில் பார்த்த நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025