கடந்தாண்டு வர்த்தக சீர்திருத்த திட்டம்.. ஆந்திரா முதல் இடம்..!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2019-ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலை வெளியிட்டார். அதில், ஆந்திரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து, தெலுங்கானாவை பின்னுக்கு தள்ளி 2-வது இடத்திற்கு உத்தரபிரதேசம் சென்றுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு உத்தரபிரதேசம் 12-வது இடத்தில் இருந்து தற்போது 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு 2-வது இடத்தில் இருந்து தெலுங்கானா தற்போது 3-வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. தொடர்ந்து 4-வது இடத்தில் மத்திய பிரதேசம், 5-வது இடத்தில் ஜார்க்கண்ட் உள்ளன.