கடந்த ஆண்டில் மட்டும் 27,046 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர் – மத்திய அரசு!
கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 77 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெண்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரக்கூடிய தேசிய குற்ற ஆவண காப்பகம் தற்பொழுது அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக நாடு முழுவதும் 3,71,503 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் பெண்களுக்கு எதிரான கற்பழிப்பு சம்பவங்கள் மட்டும் 27,046 பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பெண்களுக்கு எதிரான மொத்த வழக்கும் அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு என கூறப்படுகிறது. மொத்தமாக பாதிக்கப்பட்ட பெண்களில் 25,498 பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், 2,655 பேர் சிறுமிகள் எனவும் கூறப்பட்டுள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 77 பெண்கள் கற்பழிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மாநிலங்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ராஜஸ்தானிலும், அடுத்ததாக உத்தரப் பிரதேசத்திலும், அதன்பின் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகியவை அடுத்தடுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.