24 மணி நேரத்தில் இதுவரையில்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா

இந்தியா முழுவது வரும் ஜூன் 30 தேதி பல தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என UNLOCK 1.0 என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது .இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்றப்பகுதிகளில் மூன்று கட்டங்களாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது .எனினும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இப்பொழுது கடைபிடித்து வரும் நடைமுறைகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது .
இந்தியாவில் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 7,964 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதுவரை பதிவான எண்ணிக்கையில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும் .24 மணிநேரத்தில் 265 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,971 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.72 லட்சத்தை கடந்துள்ளது .இதில் 86,984 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .