மது கிடைக்காத விரக்தியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த லாரி ட்ரைவர்!
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாடு முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால்அனைத்து குடிமகன்களும் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மது கிடைக்காததால் 6 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அறந்தாங்கி அருகே கருப்பையா என்ற லாரி ஓட்டுநர் மது கிடைக்காத விரக்தியில் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து, தமிழகத்தில் இதுவரை மது கிடைக்காததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.