ஜூலை 24ம் தேதி பூமியை கடக்கும் மிகப்பெரிய விண்கல் .! எச்சரிக்கை விடுத்த நாசா.!

Default Image

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமியை ஒரு மிகப் பெரிய விண்கல்லான ‘விண்கல் 2020 ND’ என்பது வரும் ஜூலை 24ம் தேதி கடக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அது மட்டுமின்றி மேலும் 2016 DY30 மற்றும் 2020 ME3 என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு விண்கற்களும் பூமி கிரகத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை தாண்டி செல்லும் என்றும் கூறியுள்ளனர். இந்த விண்கற்களும்’ அபாயகரமான விண்கற்கள்’ (PHA) என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் நாசா ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் எந்தவொரு விண்கற்களும் 0.05 வானியல் அலகயோ, அதற்கு குறைவான சுற்று வட்டப்பாதை தூரத்தை கொண்டிருந்தால், அவை அபாயகரமான விண்கற்களாக கருதப்படும் என்று கூறியிருந்தது.

இதில் 170 மீட்டர் நீளமுடைய 2020 ND விண்கல் மணிக்கு 48,000 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என்றும், இந்த விண்கலம் பூமி கிரகத்திற்கு 5,086,328 கிலோமீட்டர் அளவிற்கு அதாவது 0.034 வானியல் அலகுக்கு நெருக்கமாக இருக்கும் என்றும், இது பூமிக்கு அருகே வரும் தூரம் ஆபத்தானது என்றும் நாசா தெரிவித்துள்ளது. மேலும், பூமியின் திசையில் 15அடி நீளத்தில் அகலமாக இருக்கும் சிறிய விண்கல்லான 2016 DY30 விண்கல் மணிக்கு 54,000கிலோ மீட்டர் வேகத்திலும், 2020 ME3 என்ற விண்கல் மணிக்கு 16,000 கிலோ மீட்டர் வேகத்திலும் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், 2016 DY30 விண்கல் பூமியை 0.02306 வானியல் அலகில் அதாவது 3.4 மில்லியன் கிலோமீட்டர் வரை நெருங்கி வரும் என்று நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள்களின் ஆய்வு மையமான சி. என். இ. ஓ எஸ் கணித்துள்ளது.

மேலும், பூமியில் இருந்து சுமார் 5.6 மில்லியன் கிலோமீட்டர் அதாவது 0.03791 வானியல் அலகு வரையில் மிக தொலைவில் இருக்கும் 2020 ME3 என்ற விண்கல் பூமியை வரும் ஜூலை 21-ம் தேதி நெருங்கி வரும் என்றும், அந்த இரண்டு பெரிய விண்கற்கள் ஜூலை 19-ம் தேதி காலை 10 அளவில் நெருங்கி வரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பெரிய விண்கற்களும் சூரியனை சுற்றி பயணம் செய்கையில் பூமியை கடப்பதால் அப்பல்லோ விண்கல் என்றும், பூமியின் பாதையை கடக்காத சிறிய விண்கல்லான 2020 ME3 யை அமோர் விண்கல் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்