கேரளாவில் மாணவ மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீகாரியம் பகுதியில் சிஇடி என்ற பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அருகே 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அசோசியேசன் சார்பில் நிழல் கொடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதில் பொறியியல் கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் அமர்வது வழக்கம். மாணவ, மாணவிகள் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் சிலர் அசோஸியேஷனில் புகார் அளித்தனர். இதனை எடுத்து அசோசியேசன் சார்பில் அந்த நிழற்குடையில் உள்ள பென்ஞ்ச்போன்ற இருக்காய் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக மூன்று இருக்கைகள் இடைவெளி விட்டு புதிதாக அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மாற்றம் கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று நிழற்குடைக்கு சென்ற மாணவ மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் மடியில் மாணவிகளும், மாணவிகள் மடியில் மாணவர்கள் அமர்ந்து புகைப்படம் எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த போராட்டம் லேப்டாப் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சென்று மாணவ மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின் பேசிய அவர், மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இப்பிரச்சினையை தெரிந்து கொண்டதாகவும் இது சரியான செயல் அல்ல என்பதால் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்ததாகவும் தெரிவித்தார். அந்த பேருந்து நிறுத்தத்தில் புதிய நிழற்குடை அமைக்கப்படும் என்றும், அதில் ஆண் பெண் சமத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…