உத்தரகாண்டில் கனமழையால் நிலச்சரிவு: 5 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் யாத்திரை செல்லும் பாதையில் ஆகஸ்ட் 4 அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர், 16 பேரை காணவில்லை. உயிரிழந்தர்களில் 3 பேர் குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் யாத்ரா மேலாண்மைப் படையினரின் தேடுதல் பணி ஒன்பதாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வட மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
அடுத்த ஐந்து நாட்களில் பீகார், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த மாநிலங்களில் பெய்த மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.