நில அபகரிப்பு – தடை செய்த பூசாரி பெட்ரோல் ஊற்றி கொலை!
நில அபகரிப்பு செய்தவர்களை தடை செய்த பூசாரி பெட்ரோல் ஊற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் கரவொலி என்ற மாவட்டத்தில் உள்ள புக்னா எனும் கிராமத்தில் கோவில் நிலத்தை ஐந்து பேர் அபகரிக்க முயற்சி செய்துள்ளனர். இந்நிலையில், கோவில் நிலத்தை அபகரிப்பதற்கு தடையாக பூஜாரி பாபுலால் வைஷ்ணவ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் நிலத்தை அபகரிக்க முடியவில்லை பூஜாரி தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்பதால், நில அபகரிப்பாளர்கள் ஆத்திரத்தில் பூசாரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துஉள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தீ வைத்துக் கொளுத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.