பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உடன் மெகா கூட்டணி.! 5 ஆண்டிற்கு பிறகு லாலு, நிதிஷ் குமார், சோனியா காந்தி சந்திப்பு.!
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். – சோனியா காந்தி, நிதிஷ்குமார், லாலு பிரசாத் சந்திப்பு பின்னர் லாலு பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது .
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரதான எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆளும் பாஜகவை வீழ்த்த மெகா கூட்டணி அமைக்க உள்ளனர்.
இந்த மெகா கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் ஆகியோர் டெல்லியில் சந்தித்து உள்ளனர்.
இந்த அரசியல் சந்திப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பு முடிந்ததும், செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் யாதவ், ‘ வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஓரணியில் நிற்க வேண்டும்.
இந்தியாவில் பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அவசியம். பாஜகவை எதிர்த்து போராடுவதில் காங்கிரஸ் முன்னணியில் இருக்கிறது. ‘ என பேசியிருந்தார். சோனியா காந்தியை சந்தித்து விட்டு வெளியே வந்த பிறகு, லாலு பிரசாத் யாதவ் மற்றும் பீகார் முதல்வர் நிதிஸ் குமார் ஆகியோர் ஒன்றாக கைகளை உயர்த்தி காண்பித்தனர்.