தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் 1996-ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது கால்நடைத் தீவன ஊழல் செய்தது தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி ஊழல் செய்தது தொடர்பான 4-வது வழக்கில் ஜாமீன் கோரி கடந்த பிப்ரவரி மாதத்தில் லாலு பிரசாத் மனு தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி தண்டனையில் பாதி காலம் முடியாததால் மனுவை தள்ளுபடி செய்தனர். பாதி தண்டனை காலத்தை நிறைவு செய்ய 2 மாதங்கள் உள்ளதால் 2 மாதங்கள் கழித்து ஜாமீன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதன்படி சமீபத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
இந்த ஜாமீன் மனு இன்று ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அபரேஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியுள்ளார். லாலு பிரசாத் தனது பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர்கள் வெளிநாடு செல்ல முடியாது. அவரது மொபைல் எண் மற்றும் முகவரியை மாற்ற வேண்டாம் என்று நீதிமன்றத்தால் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாலு பிரசாத் மீது ஐந்து வழக்குகள் இருந்தன. இதுவரை, அவர் மூன்று வழக்குகளில் ஜாமீன் பெற்ற நிலையில் இன்று அவருக்கு நான்காவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளது. இப்போது லாலு யாதவுக்கு மொத்தம் நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐந்தாவது வழக்கு டோராண்டா கருவூலம் தொடர்பான வழக்கு உள்ளது. இது குறித்து சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.
சாய்பசா கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி ரூபாய் ஊழல் செய்தது, தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.79 லட்சம் ஊழல் செய்தது, மேலும் ஒரு ஊழல் வழக்குகளில் ஏற்கனவே லாலு பிரசாத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அவரது மகனும், எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஷ்வி யாதவ் ஜாமீன் நிலைமை குறித்து கூறினார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
தற்போது அவர் எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை நடந்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்தும் நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அவரது சிறுநீரக தொற்று மிக அதிகமாக உள்ளது மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. அவர் எய்ம்ஸில் மட்டுமே சிகிச்சை பெறுவார் என தெரிவித்தார்.
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…