லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை!

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமரும், முக்கியமான விடுதலைப் போராட்ட வீரருமாகிய லால்பகதூர் சாஸ்திரி அவர்களின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் விஜய் காட்டிலுள்ள அவரது நினைவிடத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார்.
மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தேசத்தின் சிறந்த குடிமகனாக முழு அர்ப்பணிப்புடனும், பக்தியுடனும் தேசத்திற்கு சேவை செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது எளிமை, நடத்தை மற்றும் நேர்மை அனைத்து மக்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Homage to former Prime Minister Shri Lal Bahadur Shastri ji on his birth anniversary. He was a great son of the country who served the nation with full devotion and dedication. His simplicity, conduct and integrity are a source of inspiration for all fellow citizens.
— President of India (@rashtrapatibhvn) October 2, 2021