பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் கட்சியிலிருந்து நீக்கம்..!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் தனது ராஜினாமா கடிதத்தை லட்சுமி நாராயணன் வழங்கினார். இந்நிலையில், எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமி நாராயணன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டைமீறியதால் லட்சுமி நாராயணன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்தது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்ததால் முதல்வர் நாராயணசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார்.