மக்களவை உறுப்பினராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட, லட்சத்தீவு எம்.பி.
லட்சத்தீவு எம்.பி முகமது பைசல், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து, தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் கொலை முயற்சி குற்றச்சாட்டின் பேரில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற லட்சத்தீவு எம்.பி முகமது பைசல், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு அவரது உறவினர் முகமது சாலியைத் தாக்கி, கொல்ல முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பைசல் தண்டிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் 32 பேர் குற்றம் சாட்டப்பட்டனர், இதில் முகமது பைசல் உட்பட, நான்கு பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தேசியவாத காங்கிரஸ் எம்பி முகமது பைசல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக, மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது.