லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி.! அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.!
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாரி புயலாக மாறும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக உருவெடுத்து புயலாக மாறும் என கூறியுள்ளனர். இது வரும் 3 ஆம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரையை நோக்கி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதியால் கேரளா, கர்நாடகாவில் கன மழை, மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலுக்கு ஜூன் 4 ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.