லட்சத்தீவு நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு..!

லட்சத்தீவு பிரச்சனை குறித்து உயிரியல் ஆயுதம் என்ற கருத்து தெரிவித்த நடிகை ஆயிஷா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சத்தீவை சேர்ந்தவர் ஆயிஷா சுல்தானா. இவர் பல மலையாள படங்களின் இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். திரைப்பட இயக்குநர், மாடல் மற்றும் நடிகையாக விளங்கும் ஆயிஷா சுல்தானா மலையாள தொலைக்காட்சி விவாதத்தில், லட்ச தீவில் கொரோனாவை உயிரியல் ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது என்ற கருத்தை தெரிவித்தார்.
இவர் கூறியிருப்பது அரசுக்கு எதிரான செயல் என்று அங்குள்ள பாஜகவினர் ஆயிஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். லட்சத்தீவு பாஜக தலைவர் அப்துல் காதர் கவரட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா மீது புகார் அளித்துள்ளார். ஆனால் ஆயிஷா மீது வழக்கு பதியவில்லை. இதன் காரணத்தால் பாஜகவினர் இவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அங்கு போராட்டம் நடத்தினர்.
பின்னர் லட்சத்தீவு போலீசார் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக குற்றம், வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025