சுவாமியே சரணம் ஐயப்பா.! சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.!
சபரிமலை ஐயப்பன் கோயிலில், பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனம் தெரிந்தது. அதனை பக்தர்கள் சரண கோஷத்துடன் வழிபட்டனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம் காண லட்சக்கணக்கான பக்தர்கள் சன்னதியில் குவிந்துள்ளனர். கூட்ட நெரிசலை தவிர்க்க மதியம் 12 மணியுடன் பக்த்ர்களை கோயிலுக்குள் காவலர்கள் அனுமதிக்கவில்லை.
மகர ஜோதி தரிசனத்தை முன்னிட்டு திருவிதாங்கூர் மஹாராஜா ஐயப்பன் கோவிலுக்கு அளித்த தங்க ஆபரணங்களால் சுவாமி ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ராஜ அலங்காரத்துடன் இருக்கும் சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை வழிபாடு நடத்தப்பட்டது.
பின்னர், தன்னை காண வந்துள்ள பக்தர்களை காண சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவில் மகரஜோதியாக பொன்னம்பல மேட்டில் தெரிவது ஐதீகம். அதே போல தற்போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தெரிந்தது. அதனை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா எனும் சரணம் கோஷங்கள் முழங்க மகரஜோதி தரிசனத்தை கண்டனர்.