லடாக் பயணம் – மோடிக்கு நன்றி தெரிவித்த ராஜ்நாத் சிங் .!
லடாக்கில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார் அதற்க்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா- சீனா இடையே எல்லைப் பிரச்சினை உள்ளதால், லடாக் எல்லையில் இரு நாடுகளின் படைகள் குவிக்கப்பட்டது. இதனிடையே இந்தியா- சீனா வீரர்கள் இடையே லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டது. இதில், இந்தியா வீரர்கள் 20 வீரமரணம் அடைந்தனர்.
இந்த சம்பவம் இரு நாடுகள் இடையே பதற்றத்தை அதிகரித்து உள்ளது. தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறார். இந்நிலையில் சீனா – இந்தியா ராணுவத்திற்கு இடையே பதற்றம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆய்வு செய்து வருகிறார்.
மேலும் அவர் படையினரிடையே பிரதமர் மோடி உரையாற்றிய பின்னர் வீரரக்ள் அனைவரும் “வந்தே மாதரம் வந்தே மாதரம்” என கோஷங்களை எழுப்பின இந்நிலையில் பிரதமர் மோடியின் லடாக் விஜயம் மற்றும் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை ஊக்குவிப்பது நிச்சயமாக இராணுவத்தின் மன உறுதியை உயர்த்தியுள்ளது எனவும் இந்த நடவடிக்கைக்கு நான் பிரதமரைப் பாராட்டுகிறேன் அவருக்கு நன்றி என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
#WATCH: Prime Minister Narendra Modi among soldiers after addressing them in Nimmoo, Ladakh. pic.twitter.com/0rC7QraWTU
— ANI (@ANI) July 3, 2020