இந்தியாவின் லடாக்கை சீனாவுக்கு சொந்தமாக்கிய டுவிட்டர்… இதற்கு 8 ஆண்டு சிறை தண்டனை…

Published by
Kaliraj

சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனம் வெளியிட்டிருந்த இருப்பிட அமைப்பில், இந்தியாவின் லடாக்கை, சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது. மேலும் அந்த சமுக வலைதள நிறுவனம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் தகவல் பாதுகாப்பு மசோதா-2019 தொடர்பாக டுவிட்டர் பிரதிநிதிகள் குழு ஒன்று நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராகியது. அப்போது லடாக் சர்ச்சை குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம் அளித்த விளக்கம் போதுமானதல்ல என நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், அப்போது இந்தியாவின் உணர்வுகளுக்கு டுவிட்டர் நிறுவனம் மதிப்பளிப்பதாக அதன்  பிரதிநிதிகள் கூறினர். ஆனால் இது இந்தியாவின் உணர்வு மட்டுமின்றி, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு சார்ந்தது என குழு தலைவர் மீனாட்சி லெகி கூறினார். மேலும் இது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறக்கூடிய பெருங்குற்றம் எனவும் அவர் தெரிவித்தார்.
Published by
Kaliraj

Recent Posts

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி! 

LSG vs MI : இறுதி வரை போராடிய மும்பை! லக்னோ ‘திரில்’ வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

3 hours ago

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

5 hours ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

5 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

6 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

7 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

7 hours ago