உச்சநீதிமன்றத்தில் நடந்த 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம்.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும் போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார்.
அதாவது, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்களை இல்லாதது வருத்தம் அளிக்கிறது. போதிய விவாதங்கள் நடக்காததால் சட்டத்தின் உள்நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. விவாதங்கள் இன்றி சட்டங்கள் நிறைவேற்றப்படுவதால், ஏராளாமான வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏன் இத்தைகைய வகையில் சட்டங்களை உருவாக்குகிறார்கள் என தெரியவில்லை என்றும் சட்டம் இயற்றுதலில் நிறைய இடைவெளி இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்றம் ஒழுங்காக செயல்படுங்கள் என்பதை நாட்டின் உட்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது சுட்டிக்காட்டியுள்ளார்.
சென்னை : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அக்கட்சி தலைவர் விஜய், முக்கிய அரசியல் பிரமுகர்களை…
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…