மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் எல்.முருகன்!

l murugan

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா  உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அறிவித்திருந்தது.

அதன்படி, உபியில் 10, பீகார், மகாராஷ்டிராவில் தலா 6,  மத்திய பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 5, குஜராத், கர்நாடகாவில் தலா 4, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் ஒடிசாவில் தலா 3, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் தலா 1 என மொத்தம் 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!

இந்த 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், பிப்ரவரி 27-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழல் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அனைத்து கட்சிகளும் வெளியிட்டு வரும் நிலையில், வேட்புமனுக்கள் தாக்களும் செய்தும் வருகின்றனர். நாளை வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.

இந்த நிலையில், மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் அமைச்சர் எல்.முருகன்.

வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் மத்திய இணை அமைச்சர் எல் முருகன். இதுபோன்று, ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து போட்டியிடுவார் எனவும் பாஜக அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்