கேரளா : குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் கட்டிடத்தில் நேற்று ஏற்பட்டபயங்கர தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். தற்போது, குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கேரள மக்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று காலை கூடிய அவசர அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த தீ விபத்தில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த நபர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
மேலும், தொழிலதிபர்கள் எம்.ஏ.யூசுப் அலி மற்றும் ரவிப்பிள்ளை ஆகியோர் இறந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ. 2 லட்சம் வழங்குவதாக கேரள முதல்வரிடம் தெரிவித்துள்ளார்கள்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை திரும்பப் பெறவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் குவைத் செல்கிறார். ஒரு தகவலின்படி, இந்த சம்பவத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…