6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார் குமாரசாமி !
கர்நாடக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்கிறது .நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்து வந்த விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.
சபாநாயகர் தலைமையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி ஆட்சிக்கு ஆதரவாக 99 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் விழுந்துள்ளன. இதனால், 6 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை இழக்கிறார்.
காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா காட்சிகளை சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் 16 பேர் மும்பையில் இருக்கும் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சூழலில். இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. 224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 20 பேர் வாக்குங்கள் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.