கங்கானாவை கன்னத்தில் அறைந்த பெண் CSIF ஊழியர் மீது உடனடி நடவடிக்கை.!
சண்டிகர்: நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் நடிகையும், பாஜக எம்.பியுமான கங்கனா ரனாவத் டெல்லி செல்வதற்காக வந்திருக்கையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் CSIF ஊழியர் ஒருவர், கங்கானாவை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கங்கனா முன்னதாக, போராடும் விவசாயிகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தாகவும், அதனால் பெண் CSIF ஊழியர் கூறியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
அதில் , தான் நலமாக இருக்கிறேன். பெண் CSIF ஊழியர் என்னை அறைந்தார். தவறாக கூறினார். பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்துவிட்டது. எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது என பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பெண் CSIF ஊழியர் குல்விந்தர் கவுரை சஸ்பெண்ட் செய்து CSIF துறைரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், குல்விந்தர் கவுர் மீது பதியப்பட்ட புகார் தொடர்பான நடவடிக்கையும் தொடர்ந்துள்ளது.