இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்க கூடாது.? – பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கேள்வி.!
குலபூஷண் ஜாதாவ் விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், அவருக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்க கூடாது.? – பாகிஸ்தான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் கேள்வி.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ் (50) உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017இல் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடியது.
சர்வதேச நீதிமன்றமானது ஜாதவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவருக்கு தூதரக அனுமதி கிடைக்கப் பெற வேண்டும் எனவும் 2019 ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இதனை அடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மறுஆய்வு செய்ய குல்பூஷன் ஜாதவ் மறுத்து விட்டதாக பாகிஸ்தான் அரசு இந்த வழக்கு நடைபெறும் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் மனு அளித்தது. மேலும், கருணைக்காக அவர் மேல் முறையீடு செய்ய விரும்புவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையானது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதிகள் அதர் மினால்லா மற்றும் மியங்குள் ஹாசன் ஒளரங்கசீப் நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாணைக்கு வந்தது. அவர்கள், இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளதால், குலபூஷண் ஜாதாவுக்கு ஆதரவாக வழக்கறிஞரை நியமிக்க இந்தியாவுக்கு மேலும் ஒரு வாய்ப்பு ஏன் வழங்க கூடாது என கூறி இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.