யார் இந்த குல்பூஷன்?! சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தொடுத்த வழக்கு என்னவானது?!

Default Image

இந்திய கடற்படை வீரர்தான் இந்த குல்பூஷன். இவர் பாகிஸ்தான் சென்று உளவு பார்த்ததாக கூறி  பாகிஸ்தான் அரசு இவரை கைது செய்தது. 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இவர் மீது, பாகிஸ்தானில் உளவு பார்த்தது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கூறி 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

இது தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் அவரை சந்திக்க இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் அரசிடம் அனுமதி கேட்டதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது.

பிறகு இவருக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்தும், பாகிஸ்தான் அரசு வியன்னா விதிகளை பின்பற்றவில்லை என கூறியும் பாகிஸ்தான் அரசு மீது இந்திய அரசு நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் மீதான மரணதண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னனர் இந்தியா சார்பில் இந்த மரணதண்டனை ரத்து செய்யப்படவேண்டும் என வாதாடியது. இதற்க்கு எதிராக பாகிஸ்தான் அரசு வாதாடியது.

இந்த வழக்கில் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு சர்வதேச நீதிமன்றம் வெளியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்