டெல்லியில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் குடவோலை முறை!
டெல்லியில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு இடம்பெற்றது. நாட்டின் 75-ஆவது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
கொடியை ஏற்றி வைப்பதற்கு முன்பு, டெல்லியில் தேசிய கோடியை ஏற்றி வைப்பதற்காக குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் குடியரசு தினவிழா நடைபெறும் கடமை பாதைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது, குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் உடனிருந்தார்.
இதன்பின், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரௌவுபதி முர்மு ஏற்றார். இதைத்தொடர்ந்து, கடமை பாதையில் முதன்முறையாக 100க்கும் மேற்பட்ட பெண் கலைஞர்கள் இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தினர்.
இவ்வாறு இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், தலைநகர் டெல்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது.
தேசிய போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி மரியாதை!!
அதில், குடவோலை கண்ட தமிழ் குடியே வாழிய வாழியவே என்ற பாடலுடன் தமிழகத்தின் பழங்கால தேர்தல் நடைமுறையை விளக்கும் குடவோலை முறை அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பற்றிருந்தது.