பட்ஜெட் 2023 : குடியரசு தலைவரை சந்தித்தார் நிதியமைச்சார் நிர்மலா சீதாராமன்.!
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கலந்தாலோசித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் தொடங்கியது. அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதன் முதலாக நாடாளுமன்றம் வந்து தனது நாடாளுமன்ற முதல் உரையை ஆற்றினார்.
அதன் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக வழக்கமாக பொருளாதார ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சரியாக 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு தற்போது நிதி அமைச்சர் அலுவலகத்தில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தற்போது அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து கலந்து ஆலோசித்து வருகிறார். அடுத்து அவர் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.