கிருஷ்ணகிரி வெடிவிபத்து; மாநிலங்களவையில் தம்பிதுரை எம்.பி கேள்வி… அமைச்சர் பதில்.!
நாடாளுமன்ற மாநிலங்களவையின் இன்றைய கூட்டத்தொடரில் எம்.பி தம்பிதுரை கிருஷ்ணகிரியில், சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.
கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் தனியாருக்கு சொந்தமான பட்டாசுக்கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடையின் உரிமையாளர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால், அருகிலிருந்த பட்டாசுக்கடையிலும் தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இன்றைய மாநிலங்களவையில், தம்பிதுரை எம்.பி கிருஷ்ணகிரி வெடிவிபத்து தொடர்பாக, கேஸ் சிலிண்டர் பாதுகாப்பு பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய அமைச்சரும், கிருஷ்ணகிரியில் வெடிவிபத்து ஏற்பட்ட பகுதிகளுக்கு அருகில், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எந்த வித எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விற்பனை எதுவும் செய்யவில்லை என பதில் அளித்திருப்பார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவும், கூட்டத்தொடரில் விவாதம் நடத்தவும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் இரு அவைகளும் மணிப்பூர் விவகாரம் தொடர்பான அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.