கிருஷ்ண ஜென்ம பூமி வழக்கு..அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை..!

உத்திரபிரதேசத்தில் உள்ள ஷாஹி இத்கா மசூதி,  ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோவில் வளாகத்திற்கு அருகில் உள்ளது. 1670ல் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில்  மதுராவில் உள்ள கேசவ்தேவ் கோவில் இடித்து “ஷாஹி இத்கா மசூதி” கட்டப்பட்டதாக இந்து தரப்பில் கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 13.37 ஏக்கர் நிலத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயில் 11 ஏக்கரில் கட்டப்பட்டுள்ளது. 2.37 ஏக்கர் பரப்பளவில் ஷாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், 13.37 ஏக்கர் மொத்த நிலமும் கிருஷ்ண ஜென்மபூமிக்கு சொந்தமானதுதான் என்று இந்துத்துவ அமைப்புகள் மதுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் இந்துக் கடவுள் கிருஷ்ணரின் பிறப்பிடம் என்றும் மசூதி  அமைந்துள்ள பகுதி கோவில் இருந்ததற்கான பல்வேறு தடயங்கள் இருப்பதாகவும் இதுகுறித்து அறிவியல் ஆய்வு உத்தரவிட வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் கோரிக்கை வைத்தனர்.

கிருஷ்ணன் ஜென்ம பூமி விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மதுரா நீதிமன்றத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. பின்னர் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியது.

1,000 காளைகள், 700 மாடுபிடி வீரர்கள்…தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டு..!

இதைத்தொடர்ந்து, அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மசூதி கமிட்டி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்று மசூதி கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றது. அப்போது, ஷாஹி இத்கா மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்த  அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மசூதியும், கோயிலும் அக்பரால் 1585 இல் தீன்-இ-இலாஹியின் கீழ் கட்டப்பட்டது என்று சிலர் கூறுகிறார்கள். 1669-ல் முகலாய மன்னன் ஔரங்கசீப் கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டியதாக இந்து தரப்பு தொடர்ச்சியாக கூறி வருகின்றன. ஔரங்கசீப் தீன்-இ-இலாஹிக்கு எதிரானவர் என்றும் அதனால் கோவிலை இடிக்கும்படி உத்தரவு பிறப்பித்தார் என பலர் கூறி வருகின்றனர்.

1582-ஆம் ஆண்டு அக்பர் தன் ஆட்சியின் கீழ் மக்கள் மதத்தின் பெயரால் வேறுபட்டு கிடப்பதை அறிந்து இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் மற்றும் சமணம் மதங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைக்க அவர் “தீன் இலாஹி” என்ற மதத்தை அக்பர் தோற்றுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
kul kul recipe (1)
Brazil plane crash
VCK Leader Thirumavalavan
pm modi CM MK STALIN
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India