அண்ணன் இறந்த பின் தன்னை படுக்கைக்கு அழைத்த அண்ணியை கொலை செய்த கொழுந்தன்!

Default Image

அண்ணன் தற்கொலை செய்து இறந்த பின் தன்னை படுக்கைக்கு அழைத்த அண்ணியை கொலை செய்துவிட்டு சரணடைந்த கொழுந்தன்.

டெல்லியில் தனது தாய் மற்றும் அண்ணியுடன் வாழ்ந்து வருபவர் தான் ரோஹித். இவருக்கு ஒரே ஒரு சகோதரன் தான். அவரும் தற்கொலை செய்து இறந்துவிட்டதால் இவரது அண்ணி தனது இரண்டு குழந்தைகளுடன் மாமியார் வீட்டிலேயே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணனின் இறப்புக்குப் பிறகு அவரது அண்ணி அடிக்கடி தவறான முறையில் தம்பியிடம் நடந்து கொள்வதாகவும், ஒருமுறை வந்து நீ என்னுடன் இருக்க வேண்டும் எனவே உன்னுடைய அம்மாவை விட்டுப் பிரிந்து இரு குழந்தைகளுடன் நாம் சேர்ந்து வாழ்வோம் என வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கோபமுற்ற ரோஹித் அவரது அண்ணியை கொலை செய்துவிட்டு போலீசில் தானாகவே சென்று சரண் அடைந்துள்ளார். அங்கு காவல் துறையினரிடம் வீட்டில் நடந்த சம்பவத்தை எடுத்துரைத்துள்ளார். அதன்பின் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவராகவே வந்து சரணடைந்து விட்டதால் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் மேலும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்