கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.
கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமாகிய கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு மழை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலரும் இந்த விமான விபத்துக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விமான விபத்தில் இரண்டு பைலட்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமாகிய கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்கள் விரைவில் மீண்டு வர என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் கோழிக்கோட்டில் உள்ள குடிமக்களுக்கும் விமான நிலையத்தின் கீழ் வசிக்கும் ஊழியர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…