விலங்குகளிடம் நடைபெற்ற கோவாக்சின் சோதனை வெற்றி – பாரத் பயோடெக்!
பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரானா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகள் கண்டறியப்பட்டு கொண்டிருக்கின்ற நிலையில், இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு சோதிப்பதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் வழங்கியது.
இதற்காக தமிழகத்தில் சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி உள்பட இந்தியாவில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விலங்குகள் மீது நடத்தப்பட்ட கோவாக்சின் தடுப்பு மருந்து பரிசோதனை வெற்றி பெற்றுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.