கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து – 64 நாடுகளின் தூதுவர்கள் குழு நேரில் ஆய்வு..?

Default Image

பாரத் பயோடெக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்வதற்காக 64 நாடுகளின் தூதுவர்கள் இன்று டெல்லிக்கு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டு செல்கிறது. முந்தைய தினங்களை காட்டிலும் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருந்தாலும், பல நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் இதற்கான தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசியை கண்டறிவதற்காக பல்வேறு கட்டமாக ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.

பாரத் பயோடெக் எனும் ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து கோவாக்சின் எனும் கொரோனா தடுப்பு மருந்து ஒன்றை தயாரித்துள்ளது. இதன் பல்வேறு கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசியை கொண்டுவருவதற்கான அனுமதியை அரசிடம் இந்த நிறுவனம் கோரியிருந்தது.

இதனை அடுத்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து மற்றும் மருந்து தயாரிப்புக்கான திட்டங்கள், மருந்து செலுத்துவது தொடர்பான கோட்பாடுகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்வதற்காக 64 நாடுகளின் தூதுவர்கள் இன்று டெல்லிக்கு வந்துள்ளனர். ஆஸ்திரேலியா, டென்மார்க், ஈரான் பூடான், பிரேசில், மியான்மர், இலங்கை, தென்கொரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 64 நாடுகளின் தூதர்கள் டெல்லி வந்து இறங்கியுள்ளனர். அதனை அடுத்து அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்று பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து குறித்து ஆய்வு செய்ய உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்